/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் பொங்கல் விழா அமர்க்களம்
/
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் பொங்கல் விழா அமர்க்களம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் பொங்கல் விழா அமர்க்களம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரியில் பொங்கல் விழா அமர்க்களம்
ADDED : ஜன 14, 2025 11:55 PM

கோவை; கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில், மாணவ மாணவியர், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர்.
பொங்கல் வைத்து குலவையிட்டு கடவுளை வணங்கினர். கோலப்போட்டிகள், பறையிசை, சிலம்பம், பம்பரம் விடுதல், பல்லாங்குழி, நுாறாங்குச்சி, ஐந்து கல் ஆட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
அம்மியில் மஞ்சள் அரைத்தல், உலக்கையில் அரிசி குத்துதல், மருதாணி வைத்தல்,பூ கட்டுதல், நாட்டுப்புறப்பாட்டு ஆகிய போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
கிராமிய ஆடை அலங்காரப் போட்டி நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு 'அழகிய தமிழ் மகன்', 'அழகிய தமிழ் மகள்' பட்டங்கள் வழங்கப்பட்டன. கல்லுாரி முதல்வர் சிவக்குமார், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.