/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 16, 2025 11:42 PM

கோவை; இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பாரம்பரியம், கலாசாரத்தை நேரடியாக தெரிந்துகொள்ளும் வகையில், சிறப்பான முறையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்கள், ஆசிரியர்கள் பாரம்பரிய உடையில் வந்திருந்தனர். வளாகத்தில் கோலமிட்டு, புதுபானையில் பொங்கல் வைத்து சூரிய வழிபாடு செய்தனர். தொடர்ந்து, ஒயிலாட்டம், கும்மியாட்டாம், கரகாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், கோலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டன.
மேலும், குதிரைசவாரி,ஒட்டக சவாரி, குதிரை வண்டி சவாரி, 90க்கால மிட்டாய்கள், பாம்பே மிட்டாய் போன்ற கடைகள் என உற்சாகமாக மாணவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
விழாவில், இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் செயலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, பள்ளி தலைவர் யமுனா சக்திவேல், முதல்வர் செண்பக வல்லி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.