/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
இந்துஸ்தான் மெட்ரிக் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2024 11:10 PM

கோவை:இந்துஸ்தான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், பாரம்பரிய உடைகளில், மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பாரம்பரிய முறையில் பாத்திக்கட்டி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கரகாட்டம், ஒயிலாட்டம், கும்மி ஆட்டம், தப்பாட்டம், காவடியாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளை, மாணவர்கள் அரங்கேற்றினர்.
திருவிழா சூழலில், 90'ஸ் மிட்டாய் கடை, குதிரை சவாரி, ஐஸ் கடை, கரும்பு ஜூஸ், கோலி சோடா, பாப்கார்ன், கம்மல் மற்றும் வளையல் கடை, பொம்மை மற்றும் பலுான் என பல்வேறு விதமான கடைகள், பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தன.
இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சரஸ்வதி, செயலர் பிரியா, தலைவர் யமுனா, முதல்வர் செண்பகவல்லி ஆகியோர் பங்கேற்றனர்.