/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவைப்புதுாரில் பொங்கல் திருவிழா
/
கோவைப்புதுாரில் பொங்கல் திருவிழா
ADDED : ஜன 16, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவைப்புதுாரிலுள்ள ஆர்.பிளாக் பார்லிமென்ட் குடியிருப்போர் சங்கத்தின், 10ம்ஆண்டு விழா மற்றும் பொங்கல் திருவிழா நடந்தது.
குடியிருப்போர் சங்க உறுப்பினர்கள் சார்பில், 25 பொங்கல் வைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான பாட்டு, நடனம், உறியடி, சைக்கிள், கபடி, ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் நடந்தன.
திரளான குடியிருப்போர் மற்றும் குழந்தைகள் பங்கேற்றனர், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு, தலைவர் பாலமுரளிகிருஷ்ணன் தலைமை வகித்தார். பிற நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அனைவருக்கும் சிறப்பு விருந்து வழங்கப்பட்டது.

