/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சூலுார் பேரூராட்சியில் பொங்கல் விழா
/
சூலுார் பேரூராட்சியில் பொங்கல் விழா
ADDED : ஜன 07, 2024 11:01 PM

சூலுார்:சூலுார் பேரூராட்சி சார்பில் நடந்த பொங்கல் விழா போட்டிகளில், முன் களப்பணியாளர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.
சூலுார் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், முன் களப்பணியாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட்டன.
உறியடித்தல், பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல், மெதுவாக சைக்கிள் ஓட்டுதல், லக்கி கார்னர் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில், முன்களபணியாளர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவரகாநாத் சிங், தலைவர் தேவி மன்னவன், செயல் அலுவலர் சதீஷ்குமார் , துணைத்தலைவர் கணேஷ் ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
முன்களப்பணியாளர்கள் கூறுகையில்,'தினமும் மன அழுத்தத்துடன் பணி புரிகிறோம். அதில் இருந்து மீளும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது மகிழ்ச்சி அளித்தது,' என்றனர்.
பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் துவாரகா நாத் சிங் கூறுகையில், 'பொங்கலை ஒட்டி முன் களப்பணியாளர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டது பாராட்டுக்குரியது.
இது அவர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது,' என்றார்.