/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கிராமங்களில் பொங்கல் விழா கோலாகலம்
/
கிராமங்களில் பொங்கல் விழா கோலாகலம்
ADDED : ஜன 17, 2025 11:44 PM

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி தாளாளர் ஹரிஹரசுதன் தலைமை வகித்தார். செயலர் ராமசாமி, இணை செயலர் சுப்ரமணி முன்னிலை வகித்தனர். முதல்வர் கோவிந்தசாமி, மக்கள் தொடர்பு அதிகாரி நாகராஜன் மற்றும் டீன்கள், துறைதுணை தலைவர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
அதில், துறை வாரியாக பொங்கல் வைக்கப்பட்டது. கல்லுாரி மாணவியர், முளைப்பாரி எடுத்தனர்; குதிரை நடனம், ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது.
* ஜோதிநகரில், புறா கண்கள் அறக்கட்டளையின் கீழ் இயங்கும், 'பிரைட் ேஹாம்' முதியோர் இல்லத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பிரைட் ேஹாம் நிர்வாக இயக்குனர் கோபி தலைமை வகித்தார். முதியோர் இல்ல நிர்வாகிகள் பிரியங்கா, ராணி ஆகியோர் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் செயல்படும், ஆண்டிபாளையம் மகளிர் கூட்டமைப்பு குழு சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கணக்காளர் விஜயா தலைமை வகித்தார். தலைவர் சாந்தி, செயலாளர் ரத்தினம், பொருளாளர் மீனாட்சி, இணை செயலாளர் சாந்தனி முன்னிலை வகித்தனர்.
அதில், பாலின சமத்துவ உறுதி மொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து, கோலப்போட்டி, கயிறு இழுத்தல், கும்மி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. மகளிர் குழு நிர்வாகி சித்ரா நன்றி கூறினார்.
* புரவிபாளையம் பொதுமக்கள் சார்பில், தைத்திருநாள், காணும் பொங்கலையொட்டி உருவார பொம்மைகள் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடந்தது. முதல் நிகழ்வாக, சலகெருது ஆட்டம் நடந்தது.தொடர்ந்து, ராமர் கோவில் வளாகத்தில் இருந்து உருவார பொம்மைகள், புரவிபாளையம் ஆல்கொண்டமால் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அதன்பின், தைத்திருநாள் நற்பணி மன்றம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.