ADDED : ஜன 14, 2025 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை வேலாண்டிபாளையம் கலா மன்றம் சார்பில், சமத்துவப் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
இந்திய கலாசார நட்புறவுக் கழகத்தின், மாநில பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் கலா மன்ற நிர்வாகி லட்சுமி ஆகியோர், வாழ்த்துரை வழங்கினர்.
இதை தொடர்ந்து, கபடி போட்டி நடந்தது. போட்டியை, இ.கம்யூ., மேற்கு மண்டல செயலாளர் சந்திரன் துவக்கி வைத்தார்.
மாணவர்களுக்கு ஓவியம் மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகள் நடந்தன.
திருவள்ளுவர் அறக்கட்டளை நிர்வாகி புகழேந்தி, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நிர்வாகி ரமணி, நாடகக் கலைஞர் திலிப்குமார் ஆகியோர், போட்டியில் நடுவர்களாக இருந்து முடிவுகளை அறிவித்தனர்.
கோவை வேலாண்டிபாளையம் கலா மன்றம் சார்பில், பொங்கல் விழா கபடி போட்டி நேற்று நடந்தது.