/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா
/
தமிழ் சங்கம் சார்பில் பொங்கல் விழா
ADDED : ஜன 15, 2024 11:09 PM
போத்தனூர்;போத்தனூர் அடுத்து மேட்டூரில் உள்ள தமிழ் மன்றம் சார்பில், பொங்கல் விழா நேற்று நடந்தது. இதனையொட்டி, பொங்கல் வைக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிறுவர், சிறுமியருக்கான லெமன் ஸ்பூன் ஓட்டம், 50 மீட்டம் ஓட்டம், லக்கி கார்னர், இசை நாற்காலி மற்றும் பெரியோருக்கு 100 மீட்டர் ஓட்டம், உரி அடித்தல் உள்ளிட்டவை நடந்தன. வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசு வழங்கப்பட்டது. கலை நிகழ்ச்சிகளுடன் விழா நிறைவடைந்தது.
* செட்டிபாளையம் செல்லும் வழியில் உள்ள மயிலாடும்பாறை குடியிருப்போர் நல சங்கம் சார்பில், முன்றாமாண்டு சமத்துவ பொங்கல் மற்றும் விளையாட்டு விழா, தில்லை நகர் பூங்காவில் நடந்தது. பிருந்தாவன் கல்வி குழும தாளாளர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.
சிறுவர், சிறுமியருக்கான ஓட்டம், இசைத்தட்டு நாற்காலி, அதிர்ஷ்ட சக்கரம், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், லெமன் ஸ்பூன், ஊசி கோர்த்தல், பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், உரி அடித்தல் மற்றும் ஆண்களுக்கான மெதுவாக பைக் ஓட்டுதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தன.
மாலையில் பரிசளிப்பு மற்றும் குழந்தைகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.