/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இளைஞர் பெருமன்றம் சார்பில் பொங்கல் விழா
/
இளைஞர் பெருமன்றம் சார்பில் பொங்கல் விழா
ADDED : ஜன 14, 2025 11:52 PM

கோவை; கோவை ஆவாரம்பாளையத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் தமிழக ஒடுக்கப்பட்டார் வாழ்வுரிமை இயக்கம் சார்பில், பொங்கல் விழா மற்றும் இ.கம்யூ., மூத்த தலைவர் நல்லகண்னுவின், 100வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், குழந்தைகளுக்கு 100 மீட்டர் ஓட்டம், சாக்கு ஓட்டம், மாறுவேட போட்டி, ஸ்லோ சைக்கிள் ரேஸ், பெண்களுக்கு கோலப்போட்டி, இசை நாற்காலி, இளைஞர்களுக்கு உறி அடித்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.
முன்னாள் கவுன்சிலர் சந்திரசேகரன், வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கினார். கட்டட தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் செல்வராஜ், தமிழக ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாவட்ட தலைவர் முருகன்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.