/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் விளையாட்டு; கிராமங்களில் உற்சாகம்
/
பொங்கல் விளையாட்டு; கிராமங்களில் உற்சாகம்
ADDED : ஜன 18, 2025 12:10 AM

சூலுார், ; சூலுார் வட்டார கிராமங்களில் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடந்தது.
பொங்கல் விழாவை ஒட்டி, சூலுார், சின்னியம்பாளையம், நீலம்பூர், ராவத்துார், முத்துக்கவுண்டன் புதுார், கருமத்தம்பட்டி, சோமனுார் உள்ளிட்ட பகுதிகளில் விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிறுவர், சிறுமியர் போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று பரிசுகளை வென்றனர்.
சின்னியம்பாளையம் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கருப்பன் கலைக்குழு சார்பில், எட்டாம் ஆண்டு பொங்கல் விழா நடந்தது. முன்னாள் தலைவர் சுப்ரமணியம் போட்டிகளை துவக்கி வைத்தார். குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம், பந்து சேகரித்தல், கேரம், கயிறு தாண்டுதல் உள்ளிட்ட ஏராளமான போட்டிகள் நடந்தன. உறியடிக்கும் போட்டி நடந்தது.
இதேபோல், முத்துக்கவுண்டன்புதுார் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கத்தில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. சிலம்பம் சுற்றுதல், சுருள், கத்தி சண்டை உள்ளிட்ட வீர விளையாட்டுகள் நடத்தப்பட்டன.
இதில், ஏராளமான குழந்தைகள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இயக்க தலைவர் சம்பத்குமார் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
பள்ளபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ண ஆசிரமத்தில் பட்டி பொங்கல் வைத்து வழிபாடு நடந்தது. தொடர்ந்து காவடி ஆட்டம் உற்சாகமாக நடந்தது.