/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் பரிசு தொகுப்பு; டோக்கன் வினியோகம்
/
பொங்கல் பரிசு தொகுப்பு; டோக்கன் வினியோகம்
ADDED : ஜன 06, 2026 06:25 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கனை ரேஷன் கடை பணியாளர்கள் வீடு, வீடாக சென்று மக்களுக்கு வினியோகம் செய்கின்றனர்.
தமிழகத்தில், தைப்பொங்கல் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும், பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது.
அதன்படி, நடப்பாண்டு தைப்பொங்கலை சிறப்பாக கொண்டாடும் வகையில், அனைத்து அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கும், தலா, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, 3,000 ரூபாய் பணம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்க, 'டோக்கன்' வினியோகம் துவங்கப்பட்டுள்ளன.பொள்ளாச்சியில், ரேஷன் பணியாளர்கள் வீடு, வீடாக சென்று, 'டோக்கன்' வினியோகம் செய்கின்றனர்.
அதில், கடையின் பெயர், ரேஷன் கார்டுதாரர் பெயர், ரேஷன் கார்டு எண், கிராமம் அல்லது தெரு பெயர் குறிப்பிடப்பட்டும், எந்த தேதியில், எந்த நேரத்துக்கு வர வேண்டும் என்ற தகவல் குறிப்பிடப்பட்டு டோக்கன் வழங்கப்படுகிறது.
குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில்,'பொள்ளாச்சியில் 93,462 ரேஷன் கார்டுதாரர்களும், ஆனைமலையில், 61,542; கிணத்துக்கடவில், 34,063 கார்டுதாரர்களும் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக, 'டோக்கன்' வினியோகிக்கப்படுகிறது. இரண்டு நாளில் 'டோக்கன்' வினியோகத்தை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது,' என்றனர்.

