/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செம்மொழி பூங்காவில் காணும் பொங்கல் குஷி
/
செம்மொழி பூங்காவில் காணும் பொங்கல் குஷி
ADDED : ஜன 18, 2026 05:36 AM

கோவை: காணும் பொங்கலை முன்னிட்டு, செம்மொழி பூங்கா, உக்கடம் பெரியகுளம், குறிச்சி குளம் ஆகியவற்றில், பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இங்கிருந்த விளையாட்டு சாதனங்களில், குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்.
செம்மொழி பூங்காவில் தினமும் ஆயிரக்காணக்கான பொதுமக்கள், இனிமையாக பொழுதை கழித்து வருகின்றனர்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களாக பூங்காவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாட்டுப்பொங்கலன்று, 29,969 பேர் பார்வையிட்டுள்ளனர். காணும் பொங்கலான நேற்று பல ஆயிரம் பேர் குடும்பத்துடன் செம்மொழி பூங்காவுக்கு விசிட் அடித்தனர்.
கோவையில் காணும் பொங்கலன்று, இத்தனை ஆயிரம் பேர் ஒரே இடத்தில் கூடி கொண்டாடுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

