/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொங்கல் தொகுப்பு டோக்கன் ரேஷன் கடைகளில் விநியோகம்
/
பொங்கல் தொகுப்பு டோக்கன் ரேஷன் கடைகளில் விநியோகம்
ADDED : ஜன 03, 2025 10:59 PM
பெ.நா.பாளையம்,; தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கியது.
தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு இம்மாதம், 10ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு ஜன., 3ம் தேதி முதல் வீடு, வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் பெரும்பாலான ரேஷன் கடைகளில் பொதுமக்களே ரேஷன் கடைக்கு நேரடியாக வந்து பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன்களை பெற்றுச் சென்றனர்.
நாள் ஒன்றுக்கு, 200 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பொது மக்களுக்கு வழங்கப்படும் டோக்கன்களில் பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் நாள், நேரம் உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டுள்ளன.