/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல்! கோலாகலமாக கொண்டாட்டம்
/
கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல்! கோலாகலமாக கொண்டாட்டம்
கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல்! கோலாகலமாக கொண்டாட்டம்
கோலமிட்டு, புத்தாடை அணிந்து பொங்கலோ பொங்கல்! கோலாகலமாக கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2025 12:11 AM

கோவை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை, புத்தாடை அணிந்தும், வாசல்களில் வண்ண கோலமிட்டும் பாரம்பரிய முறைப்படி, கோவை மக்கள் விமரிசையாக கொண்டாடினர்.
தை மாதத்தின் முதல் நாளான நேற்று சூரியனுக்கும், இயற்கைக்கும் நன்றி தெரிவிக்கும் விழாவாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது.
அதிகாலை முதலே, மக்கள் வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டும், புத்தாடை அணிந்து, மங்களகரமாக புத்தரிசியில் பொங்கலிட்டு, உற்சாகமாக கொண்டாடினர்.
பொங்கல் பொங்கும் சமயத்தில், 'பொங்கலோ பொங்கல்' எனக் கூறி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வளம் பொங்கிட வேண்டி நின்றனர். நண்பர்களுக்கும், பக்கத்து வீட்டாருக்கும், உறவினர்களுக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
பண்டிகையையொட்டி, கோவை மாநகரில் கரும்பு, பூ தவிர மஞ்சள் போன்ற பூஜை பொருட்களின் விற்பனை அமோகமாக நடந்தது. குழந்தைகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி, பரிசுகள் வழங்கப்பட்டன.
மக்கள் எவ்வித நோய் நொடியும் இன்றியும், நலமுடன் வாழ கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. போலீஸ் ஸ்டேஷன்களில், போலீசாரும் பொங்கல் வைத்து கொண்டாடினர். புதிதாக வீடு கட்டியவர்கள், வாங்கியவர்கள் சொந்த வீட்டில் முதல் முறை பொங்கல் வைத்து கனவு இல்லங்களை நனவாக்கினர்.
இன்று விவசாயத்துக்கு உதவும் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக, மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது.
சமத்துவ பொங்கல் கொண்ட்டாட்டம்
n தி.மு.க., சிங்காநல்லுார் பகுதி கழகம் சார்பில், 100 பானைகளில் பொங்கல் வைத்து, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. சிங்காநல்லுார் மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். கோவை எம்.பி., ராஜ்குமார், கலை இலக்கிய பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
n கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., பீளமேடு பகுதி -கழகம், 52வது வட்ட கழகம் சார்பில், பீளமேடுபுதுார் மாரியம்மன் கோவில் திடலில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. குழந்தைகள், மாணவ, மாணவியர், இளைஞர்கள், பெண்கள் மற்றும் முதியோர் பங்கேற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
n கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., விவசாய தொழிலாளர் அணி சார்பில், வேலாண்டிபாளையம் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீதியில், 5,000 பேருக்கு நலத்திட்ட உதவி, போலீசாருக்கு 'சிசி டிவி' கருவி, கோவிலுக்கு இடம் என, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிகள் வழங்கப்பட்டன.