/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'ஏழைத்தலைவனும், ஏவுகனை நாயகனும்'; கம்பன் கலைமன்ற விழாவில் புகழாரம்
/
'ஏழைத்தலைவனும், ஏவுகனை நாயகனும்'; கம்பன் கலைமன்ற விழாவில் புகழாரம்
'ஏழைத்தலைவனும், ஏவுகனை நாயகனும்'; கம்பன் கலைமன்ற விழாவில் புகழாரம்
'ஏழைத்தலைவனும், ஏவுகனை நாயகனும்'; கம்பன் கலைமன்ற விழாவில் புகழாரம்
ADDED : ஜூலை 17, 2025 09:37 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி கம்பன் கலை மன்றம் சார்பில், 'ஏழைத்தலைவனும், ஏவுகனை நாயகனும்' என்ற தலைப்பிலான நிகழ்ச்சி, லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது.
காமராஜரின் பிறந்த நாளும், மறைந்த முன்னாள் ஜனாதிபதி கலாம் நினைவு நாளும் இந்த மாதத்தில் வருவதால், இருவரின் தியாக வாழ்க்கை பற்றி பேசும் கூட்டமாக நடந்தது. கவிஞர் பாபு வரவேற்றார்.
பொள்ளாச்சி எஸ்.டி.சி., முதல்வர் முனைவர் வனிதாமணி தலைமை வகித்து பேசுகையில், ''காமராஜர், கலாம் இருவரும், எளிய குடும்ப பின்னணியில் பிறந்து, உண்மை, உழைப்பு, உயர்வு என நாட்டுக்காக நேர்மையாக வாழ்ந்து மறைந்த தியாக சீலர்கள்,'' என்றார்.
பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை இணை செயலாளர் ஆனந்தகுமார், பொள்ளாச்சி பகுதியில், காமராஜர் உருவாக்கிய பி.ஏ.பி., திட்டம் குறித்தும், இளம் தொழில் முனைவோருக்கும் கலாம் எவ்வாறு உந்து சக்தியாக இருந்தார், என, விளக்கினார்.
பட்டிமன்ற பேச்சாளர் தங்கதுரை பேசுகையில், ''இருவரும் எக்காலத்தும் போற்றப்பட வேண்டிய தலைவர்கள். இளைய தலைமுறையினர் அவர்களின் வாழ்க்கையில் இருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்,'' என்றார். கவிஞர் இன்பஜெயந்தி நன்றி கூறினார். மன்ற செயலர் சிவக்குமார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மாநில அளவில் பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கார்த்திக், குருதீப், சுபஸ்ரீ ஆகியோருக்கு விருதுகளும், பாராட்டுச்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
காளியண்ணன்புதுார் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தது. கூட்டத்தில், கம்பன் கலைமன்ற தலைவர் சண்முகம், நிர்வாகிகள் ரமேஷ் சென்னியப்பன், காளிமுத்து, ரவீந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.