தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தேய்ப்பு பெட்டி தேவைப்படும் ஏழைகள் விண்ணப்பிக்கலாம்

தேய்ப்பு பெட்டி தேவைப்படும் ஏழைகள் விண்ணப்பிக்கலாம்

தேய்ப்பு பெட்டி தேவைப்படும் ஏழைகள் விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 25, 2024 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2024 12:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை : சலவை தொழில் மேற்கொள்ளும் ஏழைகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக சமையல் எரிவாயுவால் இயங்கும், தேய்ப்புபெட்டிகளை வழங்க, தமிழக அரசு முன்வந்துள்ளது.

கலெக்டர் கிராந்திகுமார் அறிக்கை:

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல இன மக்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக, இத்துறை வாயிலாக நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

சலவைத் தொழிலை மேற்கொள்ளும், ஏழை எளிய மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, சமையல் எரிவாயு பயன்படுத்தி இயக்கப்படும், தேய்ப்பு பெட்டிகள் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த, தமிழ்நாடு அரசு முன்வந்துள்ளது.

பொருளாதாரத்தில் பின்தங்கிய, பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்த சலவைத் தொழிலில் ஈடுபடுவோர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருவாய், ரூ.ஒரு லட்சம். விண்ணப்பங்களை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறும்பான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us