/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நெடுஞ்சாலை பணியில் தரமில்லை! அன்னுாரில் கிராம மக்கள் புகார்
/
நெடுஞ்சாலை பணியில் தரமில்லை! அன்னுாரில் கிராம மக்கள் புகார்
நெடுஞ்சாலை பணியில் தரமில்லை! அன்னுாரில் கிராம மக்கள் புகார்
நெடுஞ்சாலை பணியில் தரமில்லை! அன்னுாரில் கிராம மக்கள் புகார்
ADDED : ஜன 10, 2025 12:11 AM

அன்னுார்; பழைய ரோட்டை பெயர்த்து எடுக்காமல் அதன் மீதே புதிய ரோடு போடப்படுவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
அன்னூர் கடைவீதியில் இருந்து, தென்னம்பாளையம் சாலை வழியாக, குமாரபாளையம், ஆலாம்பாளையம் என, 5 கி.மீ., தொலைவிற்கு மாநில நெடுஞ்சாலை துறை சார்பில், புதிய சாலை அமைத்தல் மற்றும் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தார்சாலை அமைப்பதால் குமாரபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், ஏற்கனவே உள்ள சாலை மீதே ஜல்லி பரப்பி தார் ஊற்றி சாலை அமைத்து வருகின்றனர்.
இதுகுறித்து குமாரபாளையம் மக்கள் கூறுகையில், 'தமிழக அரசு, தரமாக சாலை அமைக்க, ஏற்கனவே உள்ள சாலையை பெயர்த்து எடுத்து விட்டு புதிய சாலை அமைக்க வேண்டும். அப்போதுதான் நீண்ட நாட்கள் சாலை நிலைத்து நிற்கும் என அறிவித்துள்ளது. ஆனால், இங்கு ஏற்கனவே உள்ள சாலை மீது புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது' என்றனர்.
இதுகுறித்து பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாவட்டச் செயலாளர் ராஜராஜசாமி மற்றும் கிராம மக்கள் நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் சுகுமாரிடம் புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் பதிலளிக்கையில், 'தற்போது ஏற்கனவே உள்ள சாலை மீது புதிய சாலை அமைப்பதற்கு தான் நிதி பெறப்பட்டுள்ளது. பழைய சாலையை பெயர்த்தெடுத்து விட்டு புதிதாக சாலை அமைக்க கூடுதல் நிதி செலவாகும். ஆனால் தற்போது அதற்கான ஒதுக்கீடு பெறப்படவில்லை' என்றனர்.

