/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி; வனத்துறையினர் கண்காணிப்பு
/
குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி; வனத்துறையினர் கண்காணிப்பு
குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி; வனத்துறையினர் கண்காணிப்பு
குடியிருப்புக்குள் முள்ளம்பன்றி; வனத்துறையினர் கண்காணிப்பு
ADDED : டிச 09, 2024 11:29 PM
கோவை; கோவை, ராமநாதபுரம் பகுதியில் குடியிருப்பு பகுதிக்குள் சுற்றித்திரியும் முள்ளம்பன்றியைப் பிடித்து, வனப்பகுதிக்குள் விடுவதற்காக, வனத்துறையினர் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வருகின்றனர்.
மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட, ராமநாதபுரம், ஸ்ரீபதி நகரில் நேற்று காலை 9:00 மணி அளவில், முள்ளம்பன்றி சுற்றித்திரிவதை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனத்துறையினர் கூறியதாவது:
வனச்சரகர் திருமுருகன் தலைமையிலான வனப் பணியாளர்கள், சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். இதில், அந்தப் பிராணி, முள்ளம்பன்றிதான் என்பது உறுதி செய்யப்பட்டது.
அது நல்ல நிலையில் இருந்தது. வனப்பகுதிக்குள் விடுவதற்காக பிடிக்க முயன்றபோது, ஓடி, புதர்களுக்குள் நுழைந்து விட்டது. அப்பகுதி பொதுமக்களிடம், முள்ளம்பன்றி குறித்து விளக்கி, மீண்டும் பார்க்க நேர்ந்தால் வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அப்பகுதியில் வனப்பணியாளர்கள் கண்காணித்து வருகின்றனர். பிடிபட்டதும் பாதுகாப்பாக வனத்துக்குள் விடுவிக்கப்படும்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

