/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆபாச பட மிரட்டல்: ஐ.டி., ஊழியர் மீண்டும் கைது
/
ஆபாச பட மிரட்டல்: ஐ.டி., ஊழியர் மீண்டும் கைது
ADDED : ஆக 04, 2025 12:40 AM
கோவை; பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததுடன், ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி பணம் பறித்த நபரை, போலீசார் நேற்று இரண்டாவது முறையாக கைது செய்தனர்.
கோ வையைச் சேர்ந்த, 40 வயது பெண் ஒருவர், சொந்தமாக ஐ.டி., நிறுவனம் நடத்தி வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்த அப்பெண்ணுக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
அவரது நிறுவனத்தில், ஈரோடு மாவட்டம், பவானியைச் சேர்ந்த அருண்குமார், 35, பணியாற்றினார். அந்த பெண்ணை, அருண்குமார் திருமணம் செய்வதாகக் கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் பெண்ணுடன் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை காட்டி பணம் பறித்துள்ளார்; பாலியல் தொல்லையும் கொடுத்து வந்துள்ளார். அப்பெண் புகாரில், 2023ல் அருண்குமாரை போலீசார் கைது செய்தனர்.
ஜாமினில் வந்த அருண்குமார், பெண்ணுக்கு மின்னஞ்சலில் நெருக்கமாக இருக்கும் ஆபாச புகைப்படங்களை அனுப்பி, மீண்டும் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். போலீசாரிடம் அந்த பெண் புகார் அளித்தார். போலீசார், அருண்குமாரை இரண்டாவது முறையாக கைது செய்தனர்.