முதுநிலை விளம்பர படிப்பு பி.எஸ்.ஜி கல்லுாரி அறிமுகம்
முதுநிலை விளம்பர படிப்பு பி.எஸ்.ஜி கல்லுாரி அறிமுகம்
UPDATED : அக் 17, 2026 05:38 PM
ADDED : அக் 17, 2026 05:34 PM

கோவை: பி.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லுாரி, அட்வர்டைசிங் கிளப் மெட்ராஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தொழில்துறை, கல்வித்துறைக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், விளம்பரம், சந்தைப்படுத்தல், தகவல் தொடர்பு துறையின் அடுத்த தலைமுறை வல்லுநர்களை தயார்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழி செய்யும்.
கல்விசார் கற்றலை தொழில்முறை பயிற்சியுடன் இணைக்க வடிவமைத்த 'விளம்பர துறையில் முதுநிலை பட்டய படிப்பு' எனும் திட்டத்தை செயல்படுத்தவும் இது உதவும்.
பி.எஸ்.ஜி. கல்லுாரி செயலாளர் கண்ணையன், முதல்வர் ஜெயந்தி, சுயநிதி பிரிவு துணை முதல்வர் உமாராணி, பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளை பிராண்டிங், கார்ப்பரேட் கம்யூனிகேஷன் பிரிவு இயக்குநர் சரவணா, மெட்ராஸ் அட்வர்டைசிங் கிளப் தலைவர் சூரஜ் சலீம், செயலர் கவிதா சீனிவாசன், மாணவர் அமைப்பின் தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
