/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் நிலைய அலுவலர் மாயம்; டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி
/
தபால் நிலைய அலுவலர் மாயம்; டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி
தபால் நிலைய அலுவலர் மாயம்; டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி
தபால் நிலைய அலுவலர் மாயம்; டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி
ADDED : ஏப் 07, 2025 05:13 AM
சூலுார்; தபால் நிலைய அலுவலர் மாயமானதால், டெபாசிட்தாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம்பாளையத்தில், கிளை தபால் நிலையம் உள்ளது. இங்கு அலுவலராக புதுக்கோட்டையை சேர்ந்த பாலாஜி, 30 என்பவர் பணியாற்றி வந்தார். சுற்றுவட்டார மக்கள், சேமிப்பு மற்றும் டெபாசிட் திட்டங்களில் சேர, பணம் மற்றும் பாஸ் புத்தகங்களை கொடுத்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக , பாலாஜி அலுவலகத்துக்கு வராமல் மாயமாகி உள்ளார். இதனால், பணம் டெபாசிட் செய்த மக்கள், அதிர்ச்சி அடைந்தனர்.
சுல்தான்பேட்டை தபால் நிலைய அதிகாரிகளிடம், சேமிப்பு பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்,என, முறையிட்டனர். போலீசில் புகார் அளிக்க, அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து, டெபாசிட் தாரர்கள் சுல்தான்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.