தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சேதமடைந்த நிலையில் தபால் அலுவலகம்

 சேதமடைந்த நிலையில் தபால் அலுவலகம்

 சேதமடைந்த நிலையில் தபால் அலுவலகம்


ADDED : நவ 29, 2025 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் தபால் அலுவலகம் சேதமடைந்த கட்டடத்தில் செயல்படுவதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கிணத்துக்கடவு, நல்லட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள தபால் அலுவலகத்தில், சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் சேமிப்பு கணக்கு வைத்துள்ளனர். இத்துடன் தபால் அனுப்பவும், ஸ்டாம்ப் வாங்கவும் மக்கள் இங்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், தபால் அலுவலக கட்டடம் அலங்கோலமாக காட்சியளிக்கிறது. கட்டடத்தின் மேல் பகுதியில் அதிகளவில் செடி, கொடிகள் முளைத்தும், கான்கிரீட் பூச்சுகள் சேதமடைந்தும் உள்ளது.

மேலும், மழை காலத்தில் கட்டடத்தின் உள்பகுதியில் ஈரப்பதம் நிறைந்தும், ஆங்காங்கே மழை நீர் வடிந்தும் காணப்படுகிறது. இதனால் இங்கு வரும் மக்கள் பலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இது மட்டும் இன்றி தபால் அலுவலக வெளிப்புறத்தில் செடி, கொடிகள் முளைத்து புதர் நிறைந்து காணப்படுகிறது.

எனவே, இங்கு உள்ள தபால் அலுவலகம் வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும், என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us