/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீர்நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு வையுங்க! அசம்பாவிதம் தவிர்க்க திட்டமிடல் அவசியம்
/
நீர்நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு வையுங்க! அசம்பாவிதம் தவிர்க்க திட்டமிடல் அவசியம்
நீர்நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு வையுங்க! அசம்பாவிதம் தவிர்க்க திட்டமிடல் அவசியம்
நீர்நிலைகளில் எச்சரிக்கை அறிவிப்பு வையுங்க! அசம்பாவிதம் தவிர்க்க திட்டமிடல் அவசியம்
ADDED : மே 06, 2025 11:41 PM
பொள்ளாச்சி: நீச்சல் பழக, நீர் நிலைகளுக்கு செல்லும் சிறுவர்கள், ஆழம் தெரியாது விபத்தில் சிக்கி உயிரிழப்பதை தடுக்க, எச்சரிக்கை அறிவிப்புகளை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கோடை விடுமுறை என்பதால், பள்ளி மாணவர்கள் பலரும் தங்களது சொந்த ஊருக்கு சென்றும், சுற்றுலா தலங்களுக்கு சென்றும் நாட்களை கழிக்கின்றனர்.
பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலர், தனக்குள் இருக்கும் திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், கலை இலக்கியம், விளையாட்டு போன்ற பல்வேறு பயிற்சி வகுப்புகளில் ஈடுபடுகின்றனர்.
அதில், நீச்சல் பழகவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும், நீர்நிலைகளைத் தேடிச் சென்று குளிப்பதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர். பி.ஏ.பி., கால்வாய், அம்பராம்பாளையம் ஆறு, ஆழியாறு அணை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு படையெடுக்கின்றனர்.
இவர்கள் குளிப்பதை காணும் சுற்றுலா பயணியரும் நீர்நிலைகளில் இறங்க ஆர்வம் காட்டுகின்றனர். அதனால், அம்பராம்பாளையம், ஆத்துப்பொள்ளாச்சி, கெடிமேடு, உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணியர் வருகை அதிகரித்துள்ளது. இப்பகுதிகளில், எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
பொள்ளாச்சி அடுத்த ஆழியாறு, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணியரின் வருகை அதிகரித்துள்ளது. சுற்றுப்பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி, இப்பகுதிகளுக்கு சென்றும் திரும்புகின்றனர்.
அப்போது, பொழுதை கழிப்பதற்காக, அருகே உள்ள நீர்நிலைகளுக்கு சென்று குளிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். விபரீதத்தை அறியாமல், பெண்கள், குழந்தைகள் என பலரும், தண்ணீரில் விளையாடுகின்றனர். இதற்கு கடிவாளம் போட வேண்டும்.
துறை ரீதியான அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொண்டு, தேவைப்படும் இடங்களில், ஆபத்தை உணர்த்தும் வகையில் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.