/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கூரியரில் அனுப்பிய தபால் மாயம்: இழப்பீடு வழங்க உத்தரவு
/
கூரியரில் அனுப்பிய தபால் மாயம்: இழப்பீடு வழங்க உத்தரவு
கூரியரில் அனுப்பிய தபால் மாயம்: இழப்பீடு வழங்க உத்தரவு
கூரியரில் அனுப்பிய தபால் மாயம்: இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 21, 2024 11:20 PM
கோவை; கூரியரில் அனுப்பிய தபால் காணாமல் போனதால், இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.
கோவை சின்னதடாகத்தை சேர்ந்த மணிகண்டன், கடந்த 2021, ஜூலை, 30ல், மணப்பாறையிலுள்ள உறவினர் சுப்ரமணியன் முகவரிக்கு, எஸ்.டி., கூரியரில் வங்கி காசோலை அனுப்பினார். ஆனால் அவர் அனுப்பிய முகவரிக்கு தபால் சென்றடையவில்லை. மணிகண்டன் முகவரிக்கு திரும்பவும் வரவில்லை. இதனால் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.
கூரியர் நிறுவனம் அளித்த பதில் மனுவில், 'காசோலை போன்றவற்றை கூரியரில் அனுப்ப கூடாது என தெரிந்தும் தவறு செய்துள்ளனர். எனவே, அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என்று தெரிவித்து இருந்தனர்.
விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், '' தபால் டெலிவரி செய்யப்படாவிட்டால், 30 நாட்களுக்குள் கூரியர் நிறுவனம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், இரண்டு மாதம் கழித்து தான் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுப்பப்பட்ட காசோலை மதிப்பு பற்றி கருத்தில் கொள்ள தேவையில்லை. சேவை குறைபாட்டை மட்டும் கருத்தில் கொண்டு, புகார்தாரருக்கு கூரியர் நிறுவனம், 20,000 ரூபாய் இழப்பீடு, வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.