/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சர்வர் பிரச்னையால் தபால் வாடிக்கையாளர்கள் தவிப்பு
/
சர்வர் பிரச்னையால் தபால் வாடிக்கையாளர்கள் தவிப்பு
ADDED : ஆக 08, 2025 09:13 PM
அன்னுார்; சர்வர் முடங்கியதால், அன்னுார் தபால் அலுவலகத்தில், நேற்று வாடிக்கையாளர்கள் தவித்தனர்.
அன்னுார் வட்டாரத்தில், கிளை தபால் அலுவலகங்கள் உள்ளன. இவற்றிற்கு, தலைமை தபால் அலுவலகம் அன்னுார் நகரில் உள்ளது. இங்கு தினமும், 300க்கும் மேற்பட்டோர் பதிவு தபால், தொடர் வைப்பு கணக்கில் பணம் செலுத்துதல், உள்ளிட்டவைகளுக்காக வந்து செல்கின்றனர்.
நேற்று காலை அன்னுார் தபால் அலுவலக மெயின் சர்வர் முடங்கியது. இதனால் பதிவு தபால் அனுப்ப வந்தவர்கள், மணிக்கணக்கில் காத்திருந்தனர். மதியம் 1:00 மணி வரை காத்திருந்த பிறகும், பதிவு தபால் புக்கிங் செய்வதற்கான சர்வர் செயல்படவில்லை.
மதியத்திற்கு பிறகு பதிவு தபால் ஏற்கப்படாது என அலுவலர்கள் கூறியதால், மறுநாள் வருவதற்காக ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுபோல் அடிக்கடி தபால் அலுவலக சர்வர் முடங்குவதாக வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர்.