/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் பட்டுவாடா; பொதுமக்கள் புகார்
/
தபால் பட்டுவாடா; பொதுமக்கள் புகார்
ADDED : மே 26, 2025 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; கோவை-சத்தி சாலையில் உள்ள கணேசபுரத்தில் கிளை தபால் அலுவலகம் செயல்படுகிறது.
இங்கிருந்து தபால்கள் பட்டுவாடா செய்யப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கணேசபுரம் பகுதி மக்கள் கூறுகையில், 'சமீபகாலமாக தபால்கள் சரியாக டெலிவரி செய்யப்படுவதில்லை.
இதுகுறித்து கேட்கச் சென்றால் அப்பகுதியில் உள்ள கடையில் தபால்கள் வைக்கப்பட்டுள்ளன. தபாலில் மொபைல் எண் இருந்தால் அழைத்து தபால் வந்துள்ளது என்று மட்டும் கூறுகின்றனர். மொபைல் எண் இல்லாவிட்டால், தபால் முறையாக டெலிவரியாவது இல்லை. என்றனர்.