/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் வினியோகம் தாமதமாகும்! ஐ.டி.சி.,யால் தபால்காரர்கள் கவலை
/
தபால் வினியோகம் தாமதமாகும்! ஐ.டி.சி.,யால் தபால்காரர்கள் கவலை
தபால் வினியோகம் தாமதமாகும்! ஐ.டி.சி.,யால் தபால்காரர்கள் கவலை
தபால் வினியோகம் தாமதமாகும்! ஐ.டி.சி.,யால் தபால்காரர்கள் கவலை
ADDED : பிப் 10, 2025 11:39 PM
கோவை; பல துணை தபால் நிலையங்களில் உள்ள பீட்களை, இணைத்து, 'மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை'யை (இன்டிபென்டன்ட் டெலிவரி சென்டர்) உருவாக்க, தபால் இலாகா முடிவு செய்துள்ளது.
தபால் வினியோகப் பணிகளை மேற்பார்வையிட, கண்காணிப்பு அமைப்பு இல்லை என்ற காரணத்தை முன்னிறுத்தி, பல துணை தபால் நிலையங்களில் உள்ள பீட்களை, ஆங்காங்கே, ஒரே அலுவலகத்தில் இணைத்து, 'மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை (ஐ.டி.சி.,)' உருவாக்க, தபால் இலாகா முடிவு செய்துள்ளது.
இதன்படி, 80 முதல் 100 (டெலிவரி பீட்) வரை எண்ணிக்கை கொண்ட தபால்காரர்களுக்கு, ஒரு ஐ.டி.சி., ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இனி பட்டுவாடா துணை அஞ்சலகங்களுக்கு வரும் கடிதங்கள், இந்த ஐ.டி.சி.,க்கு வரும் வகையில் ஏற்பாடு செய்யப்படும். தலைமை தபால் நிலையங்களிலோ அல்லது தபால் துறைக்கு சொந்தமான இடத்திலோ, இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டால், தபால் வினியோகத்தில் கால தாமதம் ஏற்படும் எனவும், இதை கைவிட வேண்டும் என்றும், தேசிய அஞ்சல் ஊழியர் சம்மேளனம், சம்மேளன தேசிய அஞ்சல் அமைப்புகள், தபால் இலாகாவுக்கு கடிதம் அனுப்பியுள்ளன. மேலும், பட்டுவாடா துணை தபால் நிலையத்தில் இருந்து, ஐ.டி.சி., மையத்துக்கு சென்று, தபால்களை சேகரித்து, மீண்டும் தங்கள் பகுதிக்கு வந்து வினியோகிக்க சிரமம் ஏற்படும் என, தபால்காரர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

