/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் கோட்ட குறைகேட்பு கூட்டம்
/
தபால் கோட்ட குறைகேட்பு கூட்டம்
ADDED : ஜூன் 06, 2025 11:22 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி ;தபால் சேவை குறித்த மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் வரும், 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு, பொள்ளாச்சி தலைமை தபால் அலுவலகத்தில் உள்ள, தபால் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடக்கிறது.
இதற்கு, தபால் சேவை குறித்த தங்கள் யோசனைகள் மற்றும் புகார்களை, பொதுமக்கள் கடிதம் வாயிலாக எழுதி அனுப்பலாம்.வரும், 13ம் தேதிக்குள் கடிதம் வந்து சேர வேண்டும். கடிதத்தை, சாந்தினிபேகம் தபால் கண்காணிப்பாளர், பொள்ளாச்சி கோட்டம், பொள்ளாச்சி - 642001 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். கடித உறையில், 'DAK ADALT' என தவறாமல் குறிப்பிட வேண்டும், என, தபால்துறை அறிவித்துள்ளது.