/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் குறைதீர் கூட்டம்: ஜன. 7ம் தேதிக்கு மாற்றம்
/
தபால் குறைதீர் கூட்டம்: ஜன. 7ம் தேதிக்கு மாற்றம்
தபால் குறைதீர் கூட்டம்: ஜன. 7ம் தேதிக்கு மாற்றம்
தபால் குறைதீர் கூட்டம்: ஜன. 7ம் தேதிக்கு மாற்றம்
UPDATED : டிச 25, 2025 08:10 AM
ADDED : டிச 25, 2025 05:02 AM
கோவை: வரும் 30ம் தேதி நடக்க இருந்த, கோவை கோட்ட தபால் குறை தீர்ப்பு கூட்டம், ஜன. 7ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் புகார்களை, 'வாடிக்கையாளர் சேவை மையம், கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கோவை கோட்டம், கோவை -641001' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். குட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையத்தில் கூட்டம் நடக்கும்.
பதிவு தபால், விரைவு தபால், பணவிடை தொடர்பான புகார்களில் தபால் பதிவு செய்யப்பட்ட நாள், நேரம், அனுப்புநர் மற்றும் பெறுநர் முழு முகவரி, தபால் பதிவு எண் ஆகியவை குறிப்பிட வேண்டும்.
சேமிப்பு கணக்கு, காப்பீடு தொடர்பான புகார்களில், கணக்கு எண், காப்பீட்டு எண் குறிப்பிட வேண்டும்.
புகார் கவரின் மேல் 'தபால் குறை தீர்ப்பு கூட்ட புகார்' என்று எழுத வேண்டும்.

