/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
‛போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கோவையில் நவ.2ம் தேதி துவக்கம்
/
‛போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கோவையில் நவ.2ம் தேதி துவக்கம்
‛போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கோவையில் நவ.2ம் தேதி துவக்கம்
‛போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட்: கோவையில் நவ.2ம் தேதி துவக்கம்
ADDED : அக் 26, 2025 07:43 PM
கோவை: மேற்கு மண்டல தபால் துறை நடத்தும், போஸ்டல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது சீசன், கோவையில் நடக்கிறது.
மேற்கு மண்டலத்தில் உள்ள 11 தபால் கோட்டங்களும், ஒரு ஆர்.எம்.எஸ்., கோட்டமும், மெயில் சர்வீஸ் பிரிவு மற்றும் மண்டல அலுவலகம் சேர்த்து, 16 அணிகள் பங்கு பெற உள்ளன. கடந்தாண்டை விட இரண்டு கூடுதல் அணிகள், இந்த முறை விளையாட உள்ளன.
தபால் துறை அதிகாரிகள், ஆபீசர்ஸ் லெவன் என்ற பெயரில், தனி அணியாக களமிறங்க உள்ளனர். போட்டிகள், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி மைதானங்களில், நவ. 2, 5 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கின்றன. அரையிறுதி மற்றும் இ றுதிப் போட்டிகள் நவ.9ம் தேதி நடக்கின்றன. மேற்கு மண்டல தபால் துறை தலைவர் சரவணன் மற்றும் மேற்கு மண்டல தபால் துறை இயக்குனர் அகில் நாயர், போட்டிகளின் அட்டவணையை வெளியிட்டனர்.
வரும் 2ம் தேதி காலை 7:30 மணிக்கு நடக்கும் துவக்க போட்டியில், நாமக்கல் கோட்ட அணியும், தர்மபுரி கோட்ட அணிகள் மோதுகின்றன.
தொடர்ந்து, சேலம் கிழக்கு கோட்ட அணி, கோவை அஞ்சல் கோட்ட அணியினர் மோத உள்ளனர். மதியம் 12.30 மணிக்கு, மண்டல அலுவலகம் அணி, பொள்ளாச்சி தபால் கோட்ட அணியும், மதியம் 3:00 மணியளவில், ஆபிசர்ஸ் லெவன் அணி, சேலம் மேற்கு தபால் கோட்ட அணியும் மோதுகின்றன. நாக் -அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டு, கோப்பை வெல்லும் அணிக்கு, சுழற்கோப்பை வழங்கப்படுகிறது.
போட்டி ஏற்பாடுகளை, கோவை ஆர்.எம்.எஸ்., கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு மேற்கொண்டு வருகிறார்.

