/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று துவங்குகிறது வைட்டமின் ஏ முகாம்
/
இன்று துவங்குகிறது வைட்டமின் ஏ முகாம்
ADDED : அக் 26, 2025 08:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: மாநில அளவில், வைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம், இன்று துவங்கி வரும், 31ம் தேதி வரை நடக்கிறது.
கோவையில், ஆறு மாதம் முதல் ஐந்து வயது வரை உள்ள, 2.66 லட்சம் குழந்தைகளுக்கு இந்த திரவம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இச்சத்து குறைந்தால், குழந்தைகளின் கண் பார்வை பாதிக்கப்படும்.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதாரநிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில், குழந்தைகளை அழைத்துச் சென்று, பெற்றோர் வைட்டமின் ஏ திரவம் எடுத்துக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும். முகாமை பயன்படுத்திக்கொள்ள, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி அறிவுறுத்தியுள்ளார்.

