/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தபால் சேவை; கோவை கோட்டத்துக்கு விருது
/
தபால் சேவை; கோவை கோட்டத்துக்கு விருது
ADDED : ஆக 28, 2025 05:48 AM
பொள்ளாச்சி; தமிழக தபால் வட்டம், சிறந்த ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் விருது வழங்கி கவுரவிக்கிறது. சேமிப்பு வங்கி, சர்வதேச அஞ்சல், அஞ்சல் ஆயுள் காப்பீடு, விளையாட்டு, திறன் உட்பட பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
பார்சல் அனுப்பியதில், 2024--25ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய வகையில், ஆர்.எம்.எஸ்., கோவை கோட்டம் முதலிடம் பிடித்தது. சர்வதேச பார்சல் மற்றும் முக்கியமான ஆவணங்களை மலிவு விலையில் அனுப்புவதற்கான சேவை (ஐ.டி.பி.எஸ்.,) பிரிவில், போதிய வருவாய் ஈட்டியதில் முதலிடமும், ஆதார் உட்பட சேவையில் மூன்றாமிடமும் பெற்றது.
பிரதம மந்திரியின் ஆயுள் காப்பீடு திட்டத்தில், காப்பீடுகளை ஈர்த்த வகையில், இரண்டாமிடமும் பெற்றது. இறகுப்பந்து போட்டியில் கோவை கோட்ட ஊழியர்கள் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு, நாளை சென்னையில் நடக்கும் விழாவில் விருது வழங்கப்படுகிறது.