/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
அஞ்சல் ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 20, 2024 10:27 PM
கோவை : பெண் தபால்காரர் தற்கொலைக்கு உயர் அதிகாரிகள்தான் காரணம் எனக்கூறி, அஞ்சல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட திருப்பரங்குன்ற துணை தபால் அலுவலகத்தில் தபால்காரராக பணிபுரிந்துவந்த சுமதி என்பவர், தற்கொலை செய்துகொண்டார்.
உயர் அதிகாரிகளின் மிரட்டலான அணுகுமுறையால் அவர் தற்கொலை செய்துகொண்டதாகக்கூறி, கோவை கோட்டத்தில் உள்ள, அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கங்கள் சார்பில், கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் அலுவலக வளாகத்தில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். சங்க கோட்ட செயல் தலைவர் முனுசாமி, அஞ்சல்-3 மாநில துணை தலைவர் ராமச்சந்திரன், கோட்ட செயலாளர் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.