ADDED : ஜன 28, 2025 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை : கோவை அகில இந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கூட்ஷெட் ரோட்டில் உள்ள தலைமை தபால் நிலையம் எதிரில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோட்ட தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
எம்டிஎஸ் தபால்காரர் காலி இடங்களை உடனே நிரப்ப, கோட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட வேண்டும், தபால்காரர்களுக்கு, தபால் பட்டுவாடா செய்ய புதிய பை வழங்க வேண்டும், ஊழியருக்கான ஐடி கார்டுகள் விண்ணப்பித்து, 20 நாட்களுக்குள் வழங்க வேண்டும், உள்ளிட்ட பல கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.
கோட்ட செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் வெங்கட்ராமன் உள்ளிட்ட, 150 க்கும் மேற்பட்ட தபால் ஊழியர்கள் பங்கேற்றனர்.