ADDED : ஆக 08, 2025 08:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு (என்.எப்.பி.இ.,) சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை குட்ஷெட் ரோடு தலைமை தபால் நிலைய வளாகம் முன், ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், தேசிய அஞ்சல் ஊழியர் கூட்டமைப்பு மற்றும் அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கத்தின் அங்கீகார நீக்க உத்தரவை திரும்ப பெற வேண்டும், ராஞ்சி உயர்நீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
அஞ்சல் 3 கோட்ட செயலாளர் கீதபிரியா தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் எபினேசர் காந்தி, முன்னாள் தேசிய உறுப்பினர் கருணாநிதி, அஞ்சல் 4 கோட்ட செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் பேசினர்.
அஞ்சல் 4 கோட்ட உதவி செயலாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார். உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.