/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போஸ்டரால் அலங்கோலமான பயணியர் நிழற்கூரை
/
போஸ்டரால் அலங்கோலமான பயணியர் நிழற்கூரை
ADDED : ஜன 21, 2024 11:44 PM

வால்பாறை:வால்பாறையில் பல்வேறு இடங்களில், பயணியர் நிழற்கூரையில், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
வால்பாறை நகரில் காந்திசிலை பஸ் ஸ்டாண்ட், தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. அனைத்து எஸ்டேட்களுக்கும், அரசு பஸ்கள் இங்கிருந்து தான் இயக்கப்படுகின்றன.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக, நகரில் கட்டப்பட்டுள்ள பயணியர் நிழற்கூரையை சுற்றிலும் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
இதே போல் அய்யர்பாடி எஸ்டேட், புதுத்தோட்டம், வாட்டர்பால்ஸ், காடம்பாறை உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால், பயணியர் நிழற்கூரை அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
பயணியர் கூறியதாவது:வால்பாறை நகராட்சி சார்பில், பல லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு இடங்களில் கட்டப்பட்டுள்ள, பயணியர் நிழற்கூரையை சுற்றிலும், பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள்விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளதால், அலங்கோலமாக காட்சியளிக்கிறது.
நகராட்சி அதிகாரிகள், விதிமுறையை மீறி ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களை அகற்றுவதோடு, அத்துமீறி அவற்றை ஒட்டுவோர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவித்தனர்.