sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மீண்டும் போஸ்டர் கலாசாரம்; மாநகராட்சி வேடிக்கை; எப்போது அதிகாரிகள் நடவடிக்கை?

/

 மீண்டும் போஸ்டர் கலாசாரம்; மாநகராட்சி வேடிக்கை; எப்போது அதிகாரிகள் நடவடிக்கை?

 மீண்டும் போஸ்டர் கலாசாரம்; மாநகராட்சி வேடிக்கை; எப்போது அதிகாரிகள் நடவடிக்கை?

 மீண்டும் போஸ்டர் கலாசாரம்; மாநகராட்சி வேடிக்கை; எப்போது அதிகாரிகள் நடவடிக்கை?

2


UPDATED : ஜன 21, 2026 08:06 AM

ADDED : ஜன 21, 2026 05:11 AM

Google News

UPDATED : ஜன 21, 2026 08:06 AM ADDED : ஜன 21, 2026 05:11 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவை மேம்பால துாண் களில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் போஸ்டர் ஒட்டி வந்தனர். கட்சி தலைவர்கள் வரும் போதெல்லாம் போஸ்டர் ஒட்டி, அலங்கோலப்படுத்தினர். பொதுமக்கள் முகம் சுழித்தனர்.

போஸ்டர் ஒட்டுவதை தடுக்க, காந்திபுரம் நஞ்சப்பா ரோடு, நுாறடி ரோடு மேம்பாலத் துாண்களில் மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஓவியங்கள், வன விலங்குகள், பறவைகள் படங்கள் வரையப்பட்டன. உக்கடம் மேம்பால துாண் களில் ஒட்டிய போஸ்டர்களை நெடுஞ்சாலைத்துறையினர் கிழித்தனர். போலீசில் புகார் கொடுத்தனர். ரோந்து போலீசார் கண்காணித்து வந்தனர். அதன்பின், துாண்களில் போஸ்டர் ஒட்டுவதை கட்சியினர் தவிர்த்தனர்.

ஆனால் நுாறடி ரோடு மேம்பாலத் துாண்கள், சித்தாபுதுார் சந்திப்பில் இருந்து உள்ள துாண்களில் கட்சியினரும், பல்வேறு அமைப்பினரும் போஸ்டர் ஒட்டி, அசிங்கப்படுத்தி உள்ளனர். மாநகராட்சியால் வரையப்பட்ட ஓவியத்தின் மீதே அரசியல் கட்சியினர் போஸ்டர் ஒட்டியுள்ளனர். போஸ்டர் ஒட்டுவதை தடுக்க ஓவியங்கள் வரையப்பட்டன. அதன் மீதே ஒட்டியிருந்தும் நடவடிக்கை எடுக்காமல் மாநகராட்சி அதிகாரிகள் வேடிக்கை பார்க்கின்றனர்.

இதேபோல், திருச்சி ரோட்டில் ரெயின்போ தியேட்டர் முதல் அல்வேர்னியா ஸ்கூல் வரை கட்டியுள்ள மேம்பாலத் துாண்களிலும் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கின்றன. அவிநாசி ரோடு ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் போஸ்டர் ஒட்டாமல் இருக்க வர்ணம் பூசப்பட்டு இருக்கிறது. ரோட்டின் மைய துாண்களில் போஸ்டர் ஒட்டவில்லை. பி.ஆர்.எஸ். மைதானம் அருகே நிலுவையில் உள்ள ஏறுதள துாண்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

'ஸ்மார்ட் சிட்டி' என்றழைக்கப்படும் கோவை, போஸ்டர் நடைமுறையால் அலங்கோலமாகி வருகிறது. பல லட்சம் ரூபாய் செலவழித்து வர்ணம் பூசுவது, ஓவியங்கள் வரைவதால் வீணாகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, போஸ்டர் ஒட்டுவோருக்கு அபராதம் விதிப்பதோடு, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அப்போது பயம் இருந்தது

மாநகராட்சி கமிஷனராக பிரதாப் இருந்தபோது, அரசு அலுவலக சுவர்கள், மேம்பால துாண்கள், அரசு கட்டடங்களில் போஸ்டர் ஒட்டும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. அதை மீறி ஒட்டியவர்கள் மீது போலீஸில் புகார் கொடுத்து, சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கு பயந்து போஸ்டர் ஒட்டுவதை அரசியல் கட்சியினர் தவிர்த்தனர். அத்தகைய நடைமுறை தற்போது பின்பற்றாத காரணத்தினாலும், ஒட்டிய போஸ்டர்களை கிழிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்காததாலும், மீண்டும் மீண்டும் ஒட்டி வருகின்றனர்.



சட்ட ரீதியான நடவடிக்கை

''மேம்பாலத் துாண்கள், அரசு கட்டடங்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்க சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள அச்சகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் நோட்டீஸ் வழங்கப்படும். தற்போது ஒட்டியுள்ள போஸ்டர்கள் கிழிக்கப்படும்,'' என்றார் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன்.








      Dinamalar
      Follow us