/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஒத்திவைக்கப்பட்ட வார சந்தை ஏலம் மீண்டும் அறிவிப்பு
/
ஒத்திவைக்கப்பட்ட வார சந்தை ஏலம் மீண்டும் அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட வார சந்தை ஏலம் மீண்டும் அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்ட வார சந்தை ஏலம் மீண்டும் அறிவிப்பு
ADDED : ஏப் 11, 2025 10:46 PM
அன்னுார்; 'தகராறால் ஒத்திவைக்கப்பட்ட வார சந்தை ஏலம் வரும் 28ம் தேதி நடைபெறும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்னுார், ஓதிமலை சாலையில், சனி தோறும் வார சந்தை செயல்படுகிறது. கடந்த மாதம் சுங்கம் வசூலிக்கும் உரிமை மற்றும் பஸ் ஸ்டாண்டில் உள்ள இருசக்கர வாகன நிறுத்துமிடத்தில் வாகனங்களிடம் வாடகை வசூலிப்பதற்கான உரிமைக்கான ஏலம் நடந்தது. இதில் தகராறு ஏற்பட்டதால் மறு தேதி குறிப்பிடாமல் ஏலம் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் பேரூராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'வருகிற 28ம் தேதி காலையில் வார சந்தையில் சுங்கம் வசூலிக்கும் உரிமைக்கான ஏலம் மற்றும் பஸ் ஸ்டாண்ட் இருசக்கர வாகன நிறுத்துமிடத்திற்கான ஏலம் நடைபெறும்,' என அறிவிக்கப்பட்டுள்ளது.