UPDATED : அக் 19, 2026 07:08 PM
ADDED : அக் 19, 2026 07:04 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூரில், 22ம் தேதி நடைபெற இருந்த 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்,' முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு தாலுகாவிலும், ஆண்டுக்கு ஒரு முறை 'உங்களைத் தேடி, உங்கள் ஊரில்,' முகாம் நடத்தப்படுகிறது.
அன்னூர் தாலுகாவில், வரும் 22, 23ம் தேதிகளில் நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால், முகாம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
