/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்காவது முறையாக டெண்டர் ஒத்திவைப்பு
/
நான்காவது முறையாக டெண்டர் ஒத்திவைப்பு
ADDED : ஜன 24, 2024 11:59 PM
வால்பாறை : வால்பாறையில், நான்காவது முறையாக டெண்டர் ஒத்திவைக்கப்பட்டதால் ஒப்பந்ததாரர்கள் விரக்தியடைந்தனர்.
வால்பாறை நகராட்சியில் தாவரவியல் பூங்கா, படகுசவாரி, சமுதாயக்கூடம், ஆடுவதைக்கூடம் ஆகியவை ஓரண்டு குத்தகை அடிப்படையில், டெண்டர் விட திட்டமிடப்பட்டது.
நேற்று நான்காவது முறையாக டெண்டர் விடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களால் டெண்டர் மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக, கமிஷனர் தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஒப்பந்ததாரர்கள் வெளிநடப்பு செய்தனர்.
ஒப்பந்ததாரர்கள் கூறுகையில், 'பூங்கா, படகுஇல்லம், சமுதாயக்கூடம், ஆடுவதைக்கூடம் ஆகியவற்றை குத்தகை அடிப்படையில் ஏலம் எடுக்க சென்ற போது, கமிஷனர் புதிய விதிமுறையை அறிவித்து, மூன்று ஆண்டுகளுக்கு குத்தகை தொகை செலுத்த வேண்டும் என்கிறார்.
ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடு இருக்ககூடாது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள விதிகளின் படி, கடைகளை குத்தகைக்கு ஏலம் விட வேண்டும்,' என்றனர்.