/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருளைக்கிழங்கு ஏலம் கூடுதல் பதிவாளர் ஆய்வு
/
உருளைக்கிழங்கு ஏலம் கூடுதல் பதிவாளர் ஆய்வு
ADDED : டிச 05, 2025 07:09 AM

மேட்டுப்பாளையம்: நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தின் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது.
இங்கு ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர் பகுதிகளில் இருந்து உருளைக்கிழங்கு கொண்டு வரப்பட்டு, தரம் பிரிக்கப்பட்டு ஏலம் விடப்படுகிறது.
இடைதரகர்கள் இன்றி வியாபாரம் செய்யப்படுவதால், விவசாயிகள் பெரிதும் பயன் அடைகின்றனர்.
நேற்று, இங்கு நடந்த உருளைக்கிழங்கு ஏலத்தை, கூடுதல் பதிவாளர் விற்பனை மற்றும் வளர்ச்சி (சென்னை) சீனிவாசன் நேற்று பார்வையிட்டார். வரத்து மற்றும் விற்பனை குறித்து கேட்டறிந்தார். விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கூட்டுறவு விற்பனை சங்கங்களின் வாயிலாக ஆண்டுக்கு ரூ.1,086 கோடி வேளாண் பொருட்கள் விற்கப்படுகிறது என்றார்.
கோவை மண்டல கூட்டுறவு இணை பதிவாளர் அழகிரி, நீலகிரி மண்டல விற்பனை சங்க இணை பதிவாளர் சித்ரா, நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க மேலாண்மை இயக்குனர் முத்துக்குமார் உடன் இருந்தனர்.----

