sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 02, 2026 ,மாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 உருளைக்கிழங்கு வியாபாரம் டல்

/

 உருளைக்கிழங்கு வியாபாரம் டல்

 உருளைக்கிழங்கு வியாபாரம் டல்

 உருளைக்கிழங்கு வியாபாரம் டல்


ADDED : பிப் 07, 2026 05:11 AM

Google News

ADDED : பிப் 07, 2026 05:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்: பாகிஸ்தானில் உருளைக்கிழங்கு விளைச்சல் அதிகரித்துள்ளதால், மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு மண்டிகளில் வியாபாரம் மந்த கதியில் நடக்கிறது.

மேட்டுப்பாளையம் காந்தி மைதானத்தில் 70க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. இதுதவிர நெல்லித்துறை சாலையில் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கமும் உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, குன்னூர், கூடலூர்; ஈரோடு மாவட்டத்தில் திம்பம், தாளவாடி, கேர்மாளம்; கர்நாடகா மாநிலத்தில் உடையர்பாளையம், சாம்ராஜ் நகர், கோலார், குஜராத், மகாராஷ்டிராவில் இந்தூர்; உத்திரபிரதேசத்தில் ஆக்ரா; உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினமும் பல நூறு டன் உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன.

இதில் வரத்துக்கும், சீசனுக்கும் ஏற்றார் போல், இந்தூர் மற்றும் ஊட்டி உருளைக்கிழங்குகள் மேட்டுப்பாளையம் மண்டிகளில் இருந்து இலங்கை, மாலத்தீவுகள் உள்ளிட்ட நாடுகளுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கேரளாவுக்கும் அதிகம் செல்கிறது. தற்போது பாகிஸ்தான் சீசன் துவங்கி உள்ளதால், ஏற்றுமதி ஆர்டர் குறைந்துள்ளது. இதனால் வியாபாரம் மிகவும் மந்த கதியில் நடப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, நீலகிரி மற்றும் வடமாநில உருளைக்கிழங்கு வர்த்தக சபை செயலாளர் பாபு கூறியதாவது:-

மேட்டுப்பாளையம் மண்டிகளுக்கு வடமாநிலங்களான இந்தூர், ஆக்ரா, கோலார், குஜராத் கிழங்குகள் வரத்து அதிகம் வர துவங்கியுள்ளன. இந்தூர் கிழங்குகள் தினமும் 20 வண்டிகள் வரை வருகின்றன.

கோலார், ஆக்ரா மற்றும் குஜராத் தல 3 முதல் 5 வண்டிகள் வருகின்றன. ஒரு வண்டிக்கு 25 டன் முதல் 30 டன் லோடு வரும். ஊட்டி உருளைக்கிழங்குகள் 2 முதல் 3 வண்டிகள் வருகின்றன.

வரத்து அதிகரிப்பால், இந்தூர் உருளைக்கிழங்குகளின் வகைகளான புக்கராஜ், ஜோதி மற்றும் சூப்பர் 6 வகைகள் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை இந்தூர் புக்கராஜ் கிழங்குகள் ரூ. 500 முதல் ரூ.600 வரையிலும், சூப்பர் 6, ரூ.600 முதல் ரூ.700 வரையிலும், ஜோதி ரூ.700 முதல் ரூ. 750 வரையிலும் விற்பனை ஆகிறது.

கோலார் கிழங்குகள் ரூ.700 முதல் ரூ.800 வரை அதிகபட்சம் விற்பனை ஆகிறது. ஆக்ராவும், குஜராத் கிழங்குகள் ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனை ஆகிறது. ஊட்டி கிழங்குகள் ரூ.900 முதல் ரூ.1,350 வரை விற்பனை ஆகிறது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து இந்தூர், ஊட்டி உருளைக்கிழங்குகள் இலங்கை, மாலத்தீவுக்கு ஏற்றுமதி ஆகும். ஆனால் தற்போது ஆர்டர்கள் மிகவும் குறைந்துள்ளன.

கடந்த ஆண்டு பாகிஸ்தானில் உருளைக்கிழங்கு விவசாயம் பாதித்து, உற்பத்தி குறைந்தது. ஆனால் இந்தாண்டு அதிகப்படியான விளைச்சல் ஆகியுள்ளது. இதனால் இலங்கைக்கு அதிகம் ஏற்றுமதி ஆகிறது. நமக்கு குறைந்துள்ளது.

வடமாநிலங்களில் இருந்து வரும் கிழங்குகள் வரத்து அதிகரிப்பால் கேரளாவுக்கு நேரடியாக கிழங்குகள் செல்கின்றன. இதனால் இங்கிருந்து நாம் கேரளாவுக்கு அனுப்பும் கிழங்குகளும் குறைந்துள்ளன. டிமாண்ட் இல்லை, வரத்து அதிகாரிப்பால் விலைகள் கடும் வீழ்ச்சியடைந்துள்ளன. இதனால் வியாபாரிகள் அப்செட் ஆகியுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.-------






      Dinamalar
      Follow us