ADDED : டிச 14, 2025 05:03 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள, நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்படுகின்றன. கடந்த சில நாட்களாக ஊட்டி உருளைக்கிழங்கு விலை சரிந்து வந்தது. தற்போது தொடர்ந்து விலை உயர்ந்துள்ளது.
கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி ஒருவர் கூறு கையில், 'ஊட்டி கிழங்குகள் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,810க்கு அதிகபட்சமாக விற்பனை ஆனது. சுமார் 1,750 மூட்டைகள் லோடு வந்தன. விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்' என்றார்.
