/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருளைக்கிழங்கு விலை சரிந்தது
/
உருளைக்கிழங்கு விலை சரிந்தது
ADDED : டிச 22, 2025 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்: -: மேட்டுப்பாளையத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை சரிந்து, மூட்டை ஒன்று ரூ.1,330க்கு விற்பனை ஆனது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது. இங்கு, நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று வரத்து அதிகரிப்பால் விலை சரிந்து விற்பனை ஆனது.
கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,330 க்கு விற்பனை ஆனது. சுமார் 2,750 மூட்டைகள் லோடு வந்தன. நேற்று முன் தினம் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ரூ.1,550 க்கு விற்பனை ஆனது' என்றார்.

