தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ உருளைக்கிழங்கு ஒரே நாளில் ரூ.470 சரிவு

உருளைக்கிழங்கு ஒரே நாளில் ரூ.470 சரிவு

உருளைக்கிழங்கு ஒரே நாளில் ரூ.470 சரிவு


ADDED : ஜூலை 13, 2025 08:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2025 08:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு விலை, ஒரே நாளில் மூட்டை ஒன்றுக்கு ரூ.470 விலை சரிந்து, ரூ.2,650க்கு விற்பனை ஆனது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம், செயல்பட்டு வருகிறது.

இங்கு, நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கேத்தி, கூடலூர் என, பல்வேறு இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக அதிகபட்சமாக, 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,300 முதல் ரூ.2,500 வரை விற்பனை ஆனது. அதன் பின் மெல்ல மெல்ல விலை உயர்ந்து வந்தது.

இதையடுத்து, நேற்று முன் தினம் ஊட்டி கிழங்குகள் அதிகபட்சமாக ரூ.3,120க்கு விற்பனை ஆனது. நேற்று ஒரே நாளில் மூட்டைக்கு ரூ.470 சரிந்து, ரூ.2,650க்கு விற்பனை ஆனது. 650 மூட்டைகள் லோடு வந்தன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us