ADDED : மார் 19, 2026 10:31 PM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கத்தில் புதன்கிழமை நடந்த ஏலத்தில், ஊட்டி உருளைக்கிழங்கு விலை மிகவும் குறைந்து விற்பனையானது. 45 கிலோ கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சமாக ரூ. 910 க்கு விற்றது. விவசாயிகள் சோகமாக இருந்தனர்.
ஆனால், நேற்று நடந்த ஏலத்தில் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் கேட்டதால், மூட்டை ஒன்று ரூ.1,400 வரை விற்பனையானது. ஒரே நாளில் ரூ.490 வரை விலை அதிகரித்ததால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று 250 மூட்டைகள் மேட்டுப்பாளையம் வந்தன. திடீர் கிராக்கிக்கு என்ன காரணம் என்று விவசாயிகளுக்கே தெரியவில்லை. யுகாதி, ரம்சான் என பண்டிகைகள் வருவதால் விலை ஏறியதாக வியாபாரிகள் கூறினர்.
-----
