ADDED : ஏப் 19, 2026 06:12 PM
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில், ஊட்டி உருளைக்கிழங்குகள் விலையில், ஏற்றம், இறக்கம் நிலவி வருகிறது.
மேட்டுப்பாளையம் -- நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்படுகிறது. இங்கு, ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கேத்தி உட்பட பல இடங்களில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்தாண்டு டிச., அதிகபட்சமாக 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை உருளைக்கிழங்குகள் ரூ.1,600 முதல் ரூ.1,900 வரை விற்பனை ஆனது. கடந்த ஜன., மாதம் அதிகபட்சமாக ரூ.2,040க்கும் பிப்., - மார்ச் மாதங்களில் சீசன் இல்லாததால், ரூ.1,300க்கும் விற்பனையானது. கடந்த ஒரு வாரமாக, ஏற்ற, இறக்கத்துடன் உள்ளது.
நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்க அதிகாரி ஒருவர் கூறுகையில், 'கடந்த திங்கள், 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை அதிகபட்சம் ரூ.1,170 வரை விற்பனை ஆனது. 14ம் தேதி ரூ.1,140க்கும், 15ம் தேதி ரூ.1,080க்கும், 16ம் தேதி ரூ.1,510க்கும், நேற்று முன் தினம் ரூ.1,400க்கும், நேற்று ரூ.1,500க்கும் விற்பனையானது. கடந்த வாரம் முழுவதும் 200 முதல் 400 மூட்டைகள் லோடு வந்தன. வரும் நாட்களில் வரத்தும், மவுசும் அதிகரிக்க வாய்ப்புள்ளது' என்றார்.---
