/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விலை சரியும் ஊட்டி உருளைக்கிழங்கு
/
விலை சரியும் ஊட்டி உருளைக்கிழங்கு
ADDED : ஏப் 09, 2025 10:31 PM
மேட்டுப்பாளையம்; ஊட்டி உருளைக்கிழங்குகள், கடந்த ஒரு மாத காலமாகவே விலை சரிந்து விற்பனை ஆகி வருகிறது. மூட்டை ஒன்று நேற்று ரூ.1,300க்கு விற்பனை ஆனது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில் உள்ள நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், நீலகிரி மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் ஏலம் விடப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதம் துவக்கத்தில் 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை, ஊட்டி உருளைக்கிழங்கு ரூ.2,000 முதல் ரூ.2,200 வரை விற்பனை ஆனது. அதன் பின் மெல்ல மெல்ல விலை குறைந்து பிப்ரவரி மாதம் 3 வாரத்தின் இருந்து ரூ.2,000க்கும் கீழ் விற்பனை ஆனது.
அதன் பின் தற்போது வரை விலை ஏற்றம் காணாமல் விலை சரிந்து வருகிறது. தற்போது ரூ.1,300க்கு விற்பனையாகி வருகிறது. நாளுக்கு நாள் ஊட்டி உருளைக்கிழங்குகள் விலை குறைந்து வருதால் விவசாயிகள் சோகம் அடைந்துள்ளனர்.

