/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பஸ் ஸ்டாண்டில் பள்ளம்; மக்கள் பாதிப்பு
/
பஸ் ஸ்டாண்டில் பள்ளம்; மக்கள் பாதிப்பு
ADDED : ஆக 10, 2025 10:21 PM

கழிவுநீர் தேக்கம் கிணத்துக்கடவு, பள்ளிவாசல் வெளிப்புற சுவர் அருகில் கழிவு நீர் செல்லாமல் தேக்கம் அடைந்து இருப்பதால், அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், அவ்வழியில் செல்லும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இத்துடன் பொது சுகாதாரமும் சீர்கெட்டு உள்ளது. இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து இங்கு கால்வாய் வசதி அமைக்க வேண்டும்.
-- கண்ணன், கிணத்துக்கடவு.
ரோட்டில் கற்கள் வீச்சு பொள்ளாச்சி ஐயப்பன் கோவில் அருகே உள்ள, ரோட்டில் மன நலம் பாதிக்கப்பட்ட நபர் ரோட்டில் செல்பவர்கள் மீது கற்கள் மற்றும் கண்ணாடி பாட்டில்கள் வீசுவதால், அவ்வழியில் பயணிப்பவர்கள் பலர் அவதிக்குள்ளாகின்றனர். இதனால் ஏதேனும் விபத்து நடக்க வாய்ப்புள்ளது. எனவே, இதை போலீசார் கவனித்து மன நலம் பாதிக்கப்பட்ட நபரை காப்பகத்தில் சேர்க்க விரைவில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
-- மணிகண்டன், பொள்ளாச்சி.
ரோடு சேதம் கிணத்துக்கடவு, புது பஸ் ஸ்டாண்ட் நுழைவு பகுதி ரோட்டில் பள்ளம் போன்ற குழி ஏற்பட்டுள்ளதால், பஸ் உள்ளே செல்லும் போது சிரமம் ஏற்படுகிறது. இத்துடன் இவ்வழியில் நடந்து செல்லும் மக்கள் அவதி அடைகின்றனர். இதை பேரூராட்சி நிர்வாகம் கவனித்து ரோட்டை சீரமைக்க வேண்டும்.
-- ராஜ்குமார், கிணத்துக்கடவு.
போஸ்டர்கள் மயம் கிணத்துக்கடவு சிக்கலாம்பாளையத்தில் உள்ள நிழற்கூரையில் அதிகமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இதனால் பார்ப்பதற்கு அலங்கோலமாக காட்சியளிக்கிறது. இதை ஊராட்சி நிர்வாகம் சார்பில் போஸ்டர்களை அகற்றம் செய்ய வேண்டும்.
-- ஜெய், சிக்கலாம்பாளையம்.
கூடுதல் கேமரா வைக்கணும் பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில் யு டேர்ன் பகுதிகளில் கூடுதலாக விபத்து மற்றும் திருட்டு உள்ளிட்ட சம்பவங்களை கவனிக்க, கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- டேவிட், பொள்ளாச்சி.
குப்பைக்கு தீ வைப்பு போடிபட்டி மாரியம்மன் கோவில் அருகில், குப்பைக்கழிவுகள் மொத்தமாக கொட்டப்பட்டு தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் அதிகமான புகை பரவுவதுடன் பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. முத்துகார்டன் மற்றும் கிருஷ்ணா கார்டன் பகுதியினரும் கழிவுகளின் புகையால் சுவாச பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்.
- சேகர், போடிபட்டி.
சரக்கு வாகனங்கள் ஆக்கிரமிப்பு உடுமலை, பசுபதி வீதியில் சரக்கு வாகனங்கள் ரோட்டை ஆக்கிரமித்து தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன. காலை நேரத்திலும் மற்ற வாகனங்கள் ரோட்டில் செல்வதற்கு இடையூறாக சரக்கு வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிக்கிறது.
- வனராஜ், உடுமலை.
கால்வாயை துார்வாரணும் உடுமலை நகராட்சி ஸ்ரீநகர் ரோட்டில் உள்ள மழைநீர் வடிகாலில் குப்பை, பிளாஸ்டிக் போடப்பட்டுள்ளதால், தேங்கி சுகாதார சீர்கேட்டினை ஏற்படுத்துகிறது. அவற்றை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ், உடுமலை.
பராமரிப்பு இல்லை உடுமலை நகராட்சி ஸ்ரீநகரில் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு இல்லாததால், குப்பை தேங்கி பொலிவிழந்து காணப்படுகிறது. இதை சுத்தம் செய்து, பராமரிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ரமேஷ், உடுமலை.
பாதாளச்சாக்கடை குழி உடுமலை, அண்ணபூரணி நகர் ரோட்டில் இருக்கும் பாதாள குழியால் பாதசாரிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர். குழியை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்காமல் விட்டுள்ளதால், இரவு நேரங்களில் அடிக்கடி அவ்வழியாக செல்வோர் அதில் தடுமாறி கீழே விழுகின்றனர். வாகன ஓட்டுநர்களும் இதனால் விபத்துக்குள்ளாகின்றனர்.
- உமாதேவி, உடுமலை.

