/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அன்சாரி வீதியில் பள்ளம்; வாகன ஓட்டுநர்கள் திணறல்
/
அன்சாரி வீதியில் பள்ளம்; வாகன ஓட்டுநர்கள் திணறல்
ADDED : மார் 20, 2024 12:32 AM

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகர், அன்சாரி வீதி சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளம், இரு சக்கர வாகன ஓட்டுநர்களை, காவு வாங்கும் வகையில் அமைந்துள்ளது.
பொள்ளாச்சி நகரில், வால்பாறை, கோவை, பாலக்காடு, திருப்பூர், உடுமலை செல்லும் பிரதான சாலைகள், நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ளன. இதேபோல, நகரில், பல கி.மீ.,க்கும் அதிகமான சாலைகள், நகராட்சி பராமரிப்பில் உள்ளன.
சில பகுதிகளில் உள்ள சாலைகள், பெரும்பாலும் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குறிப்பாக, மார்க்கெட் ரோடு, ராஜாமில்ரோடு, தெப்பக்குளம் வீதி என, பல இடங்களில், சாலைகள் சேதமடைந்துள்ளன.
அவ்வகையில், அன்சாரி வீதியில், சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளம், இரு சக்கர வாகன ஓட்டுநர்களை 'காவு' வாங்கும் வகையில் காணப்படுகிறது. இரவு நேரத்தில் அதிவேகமாக அவ்வழித்தடத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள், அடிக்கடி விபத்தில் சிக்கி, காயமடைகின்றனர்.
தன்னார்வலர்கள் கூறியதாவது:
நகராட்சி சாலைகளில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பல இடங்களில், பாதாள சாக்கடை ஆளிறங்கு குழாயின் மூடி, சாலையின் சமநிலைக்கு ஏற்றவாறு அமைக்கப்படாமல் உள்ளது.
திடீரென குழியில் சிக்கும் இருசக்கர வாகன ஓட்டுநர்கள், கீழே விழுந்து காயமடைகின்றனர். நகரில் தார் சாலைகளை புதுப்பித்தல், புனரமைத்தல் பணிக்காக, செலவினங்களை ஒதுக்க வேண்டும்.
நகராட்சி நிர்வாகம், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள சாலைகளை புதுப்பித்து, பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

